ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு சுரேஷ் (43). இவரது நண்பரன ஏட்டு கல்யாணசுந்தரம், ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருந்து சமீபத்தில் பவானிசாகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஏட்டு சுரேஷ் கடந்த ஓராண்டுக்கு முன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள பைனான்சியரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதற்கு கல்யாணசுந்தரம் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளார். கடந்த 5 நாட்களுக்கு முன் ஏட்டுகள் சுரேஷ், கல்யாணசுந்தரம் இருவரும் குமாரபாளையத்தில் உள்ள பைனான்சியரை சந்தித்து பணம் தருவதற்கு தாமதம் பற்றி பேச சென்றனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சுரேஷின் வாக்கி-டாக்கியை பிடுங்கி கல்யாணசுந்தரம் தூக்கி எறிந்தார். தகவல் அறிந்த ஈரோடு எஸ்பி சசிமோகன், ஏட்டுகள் சுரேஷ், கல்யாணசுந்தரம் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
