தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே தலைமையில் (13) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த அதிகாரசபையினால் “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு நாளை” வீடமைப்புத் திட்டம், “மிஹிந்து நிவஹன” திட்டம், சுமித்துரு திட்டம், சியபத வீட்டுத்திட்டம், சுபிரி அடுக்குமாடி திட்டம் மற்றும் இந்திய வீட்டு உதவித் திட்டம் உட்பட பல்வேறு வீட்டுத் திட்டங்களை செயல்படுத்துகின்றது. 2022 ஆம் ஆண்டில் இந்தத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் அமைச்சருக்கு அறிக்கை அளித்தார்கள்.
வீட்டுக்கடன் மீளப் பெறுதலின் முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் விளக்கினார். கடந்த நவம்பரில் 303 மில்லியன் ரூபா கடன் மீளப் பெறப்பட்டது. இந்த தொகையை மேலும் அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இங்குள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை) கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன, மேலதிக செயலாளர் (வீடமைப்பு) டபிள்யூ.எம். ஆனந்த, பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) அனோமா விஜேரத்ன, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் கே.ஏ. ஜானக மற்றும் அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.