Pathaan: காவி நிற நீச்சலுடையில் உச்சக்கட்ட கவர்ச்சி.. ஷாருக்கானின் 'பதான்' படத்தால் வெடித்த சர்சை.!

ஷாருக்கான் தற்போது ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். தளபதியை வைத்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக மாறிய அட்லீ தற்போது தனது பாலிவுட் பயணத்தை துவங்கியுள்ளார். இந்தப்படத்தை ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப்படத்தை தயாரித்து வருகிறது.

இதனிடையில் ‘பதான்’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார் ஷாருக்கான். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடித்துள்ள ‘பதான்’ படத்தின் முதல் சிங்கிளான ‘பேஷ்ரம் ரங்’ பாடல் இரு தினங்களுக்கு முன்பு யூடியூபில் வெளியானது. நீச்சல் உடையில் தீபிகா படுகோனேவின் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ள இந்தப்பாடலின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும், இரண்டு நாட்களில் 34 மில்லியன் பார்வைகளை கடந்து இப்பாடல் டிரெண்டிங்கில் கலக்கி வருகிறது. இந்நிலையில் இப்பாடலில் தீபிகா படுகோனே அணிந்துள்ள நீச்சல் உடையின் நிறமும், பாடலுக்கு அவர்கள் வைத்துள்ள ‘பேஷ்ரம் ரங்’ என்ற வார்த்தைகளும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. ‘பேஷ்ரம் ரங்’ என்றால் ‘வெட்கமற்ற நிறம்’ என்று அர்த்தம். பாடலின் முடிவில் காவி நிற நீச்சல் உடை ஒன்றை அணிந்து வருகிறார் தீபிகா.

அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் பாஜக மற்றும் சில இந்து அமைப்பினர் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த பாடலின் காட்சியில் காவி நிறத்திலான கவர்ச்சி உடையில் தீபிகா படுகோன் காட்சிகளை நீக்கவில்லை என்றால் படத்தை திரையிட அனுமதி மறுக்கப்படும் என மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Karthi: கார்த்தி எடுத்துள்ள புதிய அவதாரம்: சினிமாவை தொடர்ந்து இதிலுமா..!

மேலும், இந்த பாடலில் திருமதி தீபிகா படுகோனின் உடைகள் மிகவும் ஆட்சேபனைக்கு உரியது. அசுத்தமான மனநிலையில் படமாக்கப்பட்டுள்ளது போல் தெளிவாக தெரிகிறது. இந்த பாடலில் உள்ள காட்சிகள் மற்றும் உடைகளை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த படத்தை மத்திய பிரதேசத்தில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கப்படுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் சூழ்நிலை வரும் என்று மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தீபிகா படுகோனே, ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக இருந்தாலும், ஷாருக்கான் படம் என்பதாலும் மட்டுமே ‘பாய்காட் பதான்’ டிரெண்டாகி வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ‘பதான்’ படத்தை ஜனவரி 25 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan: இரத்தம் தெறிக்க உருவான ‘தேவர் மகன்’ கிளைமேக்ஸ்: ரகசியத்தை உடைத்த ஆண்டவர்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.