தளபதி விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவடைய இருக்கின்றது. வம்சி இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக இப்படத்தின் மூலம் முதல் முறையாக ராஷ்மிகா இணைந்துள்ளார். மேலும் தமன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கின்றார்.
இவ்வாறு முற்றிலும் புதுமையான கூட்டணியுடன் விஜய் இம்முறை களமிறங்குவதால் ரசிகர்கள் வாரிசு திரைப்படத்தை ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதை தவிர இப்படத்தில் சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
Thlapathy vijay: அரசியல் வசனங்கள் வேண்டாம் ..உத்தரவிட்ட விஜய்..காரணம் இதுதானா ?
இந்நிலையில் இப்படம் வழக்கமான விஜய் படங்களை போல இல்லாமல் சற்று வித்யாசமாக இருக்கும் என்றும், எமோஷனல் கலந்த குடும்ப படமாக இப்படம் உருவாகி இருப்பதாகவும் தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து இப்படத்திலிருந்து வெளியான ரஞ்சிதமே, தீ தளபதி ஆகிய பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
இந்நிலையில் இப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் இறுதியில் மிகப்பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது. இந்த விழாவில் நடிங்கர் விஜய்யின் பேச்சை கேட்க கோடானகோடி ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தை பற்றி பிரபல நடிகர் கணேஷ் வெங்கடராமன் கூறிய தகவல் தான் தற்போது செம வைரலாகி வருகின்றது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கணேஷ் வெங்கட்ராமன் படத்தைப்பற்றி பல விஷயங்களை பேசியுள்ளார்.
குறிப்பாக கணேஷ் வெங்கடராமன் இப்படத்தில் வில்லனாக நடிப்பதாகவும், எஸ்.ஜெ சூர்யா தான் வாரிசு படத்தில் முக்கியமான திருப்புமுனை என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து படத்தில் எஸ்.ஜெ சூர்யா முக்கியமான ரோலில் நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும் படத்தின் ட்விஸ்ட்டையே கணேஷ் வெங்கட் ராமன் பேட்டியில் கூறியுள்ளதால் படக்குழு அப்சட்டில் இருப்பதாக தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது