தமிழ் சினிமாவில் தளபதியாக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரையில் வெளியாகவுள்ளது.
வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகின்றார். மேலும் இப்படத்தில் சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
Selvaraghavan: வாழ்க்கையில் யாரையும் நம்பி இருக்க கூடாது..செல்வராகவன் வேதனை..!
இந்நிலையில் இப்படம் வழக்கமான விஜய் படங்களை போல இல்லாமல் சற்று மாறுபட்டு இருக்கும் என்றும், துள்ளாத மனமும் துள்ளும், பூவே உனக்காக படத்தில் பார்த்த விஜய்யை வாரிசு திரைப்படத்தில் பார்க்கலாம் எனவும் பல தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதன் காரணமாக இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்திலிருந்து ரஞ்சிதமே, தீ தளபதி ஆகிய பாடல்கள் வெளியாகி செம ஹிட்டடித்தது. இதையடுத்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பானது. இந்நிலையில் தற்போது இப்படத்தை பற்றி நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கணேஷ் வெங்கட்ராமன் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யுடன் நடித்த அனுபவங்களை பற்றி பேசியுள்ளார்.
அந்த வகையில் நடிகர் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் மொபைல் போனை பயன்படுத்தவே மாட்டாராம். ஒரு நாற்காலியில் தனியாக அமர்ந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் விஷயங்களை உன்னிப்பாக கவனித்து வருவாராம் விஜய். இந்த தகவலை கணேஷ் வெங்கட்ராமன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.