ஆஸ்கர், கோல்டன் குளோபில் வரிசை கட்டும் ராஜமவுலியின் RRR.. நாமினேஷன் லிஸ்ட் இதோ!

PAN India படமாக உலகெங்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியான எஸ்.எஸ்.ராஜமவுலியின் RRR படம் தற்போது PAN World ஆக மாறி உள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 1,200 கோடி ரூபாயும் இந்தியாவில் மட்டுமே 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் வேட்டையாடியிருக்கிறது RRR படம். இதுபோக ஜப்பான் மற்றும் கொரிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி பட்டையக்கிளப்பிக் கொண்டிருக்கிறது RRR.

இப்படி இருக்கையில், சினிமா உலகின் உச்ச விருதுகளில் ஒன்றான கோல்டன் குளோபில் (Golden Globe) இரண்டு பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத படமாக உருவெடுத்திருக்கிறது ராஜமவுலியின் RRR.

மேலும் New York Film critics circle, Hollywood Critic Association spotlight award, National board of review என இன்னும் பல சர்வதேச விருதுகளை குவித்து உலக சினிமாத்துறையினரையே அன்னார்ந்து பார்க்க வைத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் தாண்டி, உலகின் மிகப்பெரிய சினிமா விருதான ஆஸ்கார் (Academy) விருதினை வெல்லும் முதல் இந்திய திரைப்படமாக இருக்கும் அதிகபடியான வாய்ப்பையும் RRR பெற்றுள்ளது. முன்னதாக பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 மூலம் இந்திய சினிமாவை மிரள வைத்த இயக்குநர் ராஜமவுலி இப்போது RRR மூலம் உலகம் முழுவதும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

Jr NTR and Ram Charan's RRR is not postponed, will release on January 7: SS  Rajamouli - India Today

இப்படி இருக்கையில், கடந்த ஒரு வாரத்தில் சர்வதேச விருதுகள் பட்டியலில் இடம்பெற்ற RRR படம் பரிந்துரை பட்டியலை காணலாம்:

1) Golden Globe – சிறந்த திரைப்படம் (Non-English), சிறந்த பாடல் (நாட்டு கூத்து )

2) Critics choice – சிறந்த திரைப்படம், சிறந்த VFX, சிறந்த திரைப்படம் (Non-English), சிறந்த இயக்குநர், சிறந்த பாடல்

3) HCA Film awards – சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த ஆக்க்ஷன், சிறந்த சர்வதேச திரைப்படம்

ஆகிய பட்டியலில் RRR படம் பரிந்துரையில் இடம்பெற்றிருக்கிறது.

– சுஹைல் பாஷா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.