ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊழியர் ஒருவர் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியுள்ள பல செய்திகள் தொடர்பில் அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் அதிகாரியை ஓமான் அதிகாரி எனக் குறிப்பிட்டு கட்டுரைகள் மக்களை மிகவும் தவறாக வழிநடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கும் ஓமான் சுல்தானேற்றிற்கும் இடையிலான சிறந்த நெருங்கிய மற்றும் சுமூகமான இருதரப்பு உறவுகளை கருத்தில் கொண்டு, ஊடகங்களின் தவறான குறிப்புக்களை சரிசெய்து, திருத்தங்களை சம அளவில் முக்கியத்துவத்துடன் வெளியிடுமாறு அமைச்சு கேட்டுக்கொள்கின்றது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 டிசம்பர் 15