கத்தாரில் தடியால் அடித்தே கொல்லப்பட்ட பிரித்தானியர்: கதறும் மொத்த குடும்பம்


கத்தாரில் எண்ணெய் கிணறு ஒன்றில் பணியாற்றும் பிரித்தானிய தந்தை ஒருவர் சக ஊழியரால் தடியால் அடித்தே கொல்லப்பட்டுள்ள சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.

ஊழியரால் கொடூரமாக படுகொலை

பிரித்தானியரான 38 வயது ராபர்ட் ராப்சன் என்பவரே கத்தாரில் சக ஊழியரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டவர்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர் அந்த சம்பவத்தை தொடர்ந்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கத்தாரில் தடியால் அடித்தே கொல்லப்பட்ட பிரித்தானியர்: கதறும் மொத்த குடும்பம் | Brit Dad Bludgeon To Death In Qatar

ராபர்ட் ராப்சன் மிகவும் இரக்க குணம் கொண்டவர், அன்பானவர் எனவும் குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இரண்டாவது முறையாக ராபர்ட் ராப்சன் தந்தையான தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே இந்த தாக்குதல் சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட நபர் ராபர்ட் ராப்சனின் உடலை மறைவு செய்ய முயற்சிக்கும் போது ஸ்கொட்லாந்து நாட்டவரான Christopher Begley என்பவரிடம் சிக்கியுள்ளார். அவரையும் அந்த நபர் தாக்கியதாகவே கூறப்படுகிறது.

கத்தாரில் தடியால் அடித்தே கொல்லப்பட்ட பிரித்தானியர்: கதறும் மொத்த குடும்பம் | Brit Dad Bludgeon To Death In Qatar

இதனையடுத்து படுகாயத்துடன் Christopher Begley மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். தற்போது Christopher Begley நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.