குடித்துவிட்டு மணமேடைக்கு வந்த மணமகன்; கடைசி நேரத்தில் மணமகள் கொடுத்த அதிர்ச்சி!

உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் நடைபெற்ற திருமணத்தின் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியில், சஃபிபூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணும், கான்பூரைச் சேர்ந்த ஒரு இளைஞனும் திருமணம் செய்துகொள்ளவிருந்தனர். அப்போது மணமேடையில் மணப்பெண் நின்றுகொண்டிருக்க, மணமகனோ போதையில் தள்ளாடிய நிலையில் வந்திருக்கிறார். இதன்மூலம் மணமகன் மது அருந்தியிருப்பதை உணர்ந்த மணமகள், மாலைகளை இருவரும் மாற்றிக்கொள்வதற்கு முன்பாக தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என துணிச்சலாக மேடையிலிருந்து இறங்கிவிட்டார்.

திருமணம்

இரு வீட்டாரும் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும், ``தன்னுடைய சொந்த திருமண நாளிலேயே குடிக்காமல் இருக்க முடியாத நபரின் எதிர்காலம் என்ன ஆகும்.?” என ஒரே முடிவாக திருமணம் வேண்டாம் என மணமகள் கூறிவிட்டார். பின்னர் இந்த விவகாரம் போலீஸிடம் செல்ல, இரு வீட்டாரும் திருமணத்தின்போது பரிமாறிக்கொள்ளப்பட்ட பொருள்களையும், பணத்தையும் திருப்பித்தர ஒப்புக்கொண்டனர். அண்மை காலங்களில் இதுபோல கடைசி நேரத்தில் நின்றுவிடும் திருமண நிகழ்வுகள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. சில வாரங்களுக்கு முன்னர்கூட விருந்தினர்கள் முன்னிலையில் மணமகன் முத்தம் கொடுத்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்திவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.