சுற்றுலா பயணிகளுக்கு 'தியத்மா' ஓய்வு படகு சேவை ஆரம்பம்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய பொழுதுபோக்கு சேவைகள் வழங்கப்படும் வகையில் பத்தரமுல்ல, தியவன்னா ஓயாவில் “தியத்மா” ஓய்வு படகு சேவை ஆரம்பமானது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனத்தினால் இந்தப் பொழுதுபோக்கு படகு (15.12.2022) சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அங்கு உரையாற்றிய நகர.அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இத்தகைய பொழுதுபோக்கு சேவைகள் உள் நீர்வழிகளில் படகு சேவை தொடங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நேரத்தில் அந்நியச் செலாவணியை அதிகரிக்க இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும்இ அவர்கள் நாட்டிலே தங்கியிருக்கும் காலத்தை அதிகரிப்பதற்கும் உரிய வேலைத்திட்டம் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார். அந்த சுற்றுலா பயணிகளுக்கு பொழுதுபோக்கிற்காக இதுபோன்ற பயணிகள் படகு சேவைகள் மிகவும் முக்கியமானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த படகு 13 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதுடன் தியத்மா என்றும் பெயரிடப்பட்டது. இங்கு சுமார் 30 பேருக்கு வசதி செய்யப்பட்டுள்ளது மற்றும் கலந்துரையாடல்கள், மாநாடுகள், நட்பு சந்திப்புகள் போன்றவற்றை நடத்தும் திறனையும் இது கொண்டுள்ளது. இந்த முழு குளிரூட்டப்பட்ட படகில் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு 20,000 ரூபாய் ஆகும்.

இந்த பொழுது போக்கு படகு சேவை தொடங்கி சில மணி நேரங்களில் இந்தப் படகை 9 பேர் முன்பதிவு செய்துள்ளதாக காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனம் கூறுகிறது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மதுர விதானகே, காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹிரான் பாலசூரிய, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர், ரஜீவ் சூரியராச்சி மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.