சென்னை: நரிக்குறவ சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறிய நிலையில் மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்த நிலையில், இது தமிழக அரசின் தொடர் முயற்சிக்கு கிடைத்த பலன் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
