பதுங்கு குழிக்குள் பாயும் ரஷ்ய ஜனாதிபதி புடின்: சந்திப்புகள் ரத்து…பீதியில் ரஷ்ய தலைநகர்!


ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் வேகமாக காய்ச்சல் பரவி வரும் நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதுங்கு குழிகளில் தஞ்சமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவை அச்சுறுத்தும் காய்ச்சல்

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 11வது மாதத்தை தொட்டு இருக்கும் நிலையில், தற்போது உக்ரைனுக்கு எதிராக கூடுதலான 200,000 வீரர்களை ரஷ்யா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள பொதுமக்களிடையே வேகமாக காய்ச்சல் நோய் பரவி வருகிறது.

பதுங்கு குழிக்குள் பாயும் ரஷ்ய ஜனாதிபதி புடின்: சந்திப்புகள் ரத்து…பீதியில் ரஷ்ய தலைநகர்! | Flu Hits Russia Putin Likely To Isolate In BunkerRussian President Vladimir Putin- ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(CNN)

ஏற்கனவே ரஷ்யாவில் பரவும் காய்ச்சல் காரணமாக ஜனாதிபதி புடின் வருடாந்திர செய்தியாளர்கள் சந்திப்பை ரத்து செய்து இருக்கும் நிலையில், ரஷ்ய அதிகாரிகளுக்கு காய்ச்சல் நோய் பரவினால், பாதுகாப்பிற்காக ஜனாதிபதி புடின் பதுங்கு குழிகளில் தஞ்சமடைவார் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  ஜனாதிபதி புடினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் Novaya Gazeta என்ற ஐரோப்பிய செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய தகவலில், கிரெம்ளினில் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த மாதம் நடைபெற இருந்த வருடாந்திர செய்தியாளர்கள் சந்திப்பை ரத்து செய்துள்ளார் என தெரிவித்தார்.

பதுங்கு குழிக்குள் பாயும் ரஷ்ய ஜனாதிபதி புடின்: சந்திப்புகள் ரத்து…பீதியில் ரஷ்ய தலைநகர்! | Flu Hits Russia Putin Likely To Isolate In Bunker Dmitry Peskov- டிமிட்ரி பெஸ்கோவ்(east2west news)

இருப்பினும் இந்த மாதம் நாடாளுமன்றத்திற்கான உரையை ஜனாதிபதி புடின் திட்டவட்டமாக ரத்து செய்யவில்லை, ஒருவேளை ஜனாதிபதி புடினின் நெருங்கிய அதிகாரிகள் யாரேனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் புடின் முழுமையான தனிமைப்படுத்துதலில் தன்னை உட்படுத்திக் கொண்டு, பொது பிரவேசங்களை முற்றிலும் தவிர்ப்பார் என்று மிரர் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.


பதுங்கு குழிக்குள் புடின்

இதற்கிடையில் டுடே வெர்ஸ்ட்கா செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், ஜனாதிபதி புடின் நாடாளுமன்ற கூட்டத்தை கைவிட திட்டமிட்டுள்ளார், அத்துடன் ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் அவருடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களை உரல் (Ural) மலைகளின் கிழக்கே உள்ள பதுங்கு குழிகளில் கழிப்பார் என்று தெரிவித்துள்ளது.

பதுங்கு குழிக்குள் பாயும் ரஷ்ய ஜனாதிபதி புடின்: சந்திப்புகள் ரத்து…பீதியில் ரஷ்ய தலைநகர்! | Flu Hits Russia Putin Likely To Isolate In Bunkerpinterest

ஜனாதிபதி விளாடிமிர் புடின் எப்போதும் தனது விடுமுறைகளை கருங்கடல் பகுதியில் கழிப்பார் என்று குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.