பூமிபூஜை விழா என்பதா..!! இது அடிக்கல் நாட்டு விழா..!! கடுப்பான திமுக எம்.பி செந்தில் குமார்..!!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆலப்புரம் ஏரியை சீரமைக்கும் பணியின் பொழுது தமிழக அரசு பொதுப்பணித்துறை சார்பில் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற திமுகவின் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அரசு நிகழ்ச்சிகள் மதரீதியான பூஜை நடத்தக் கூடாது என தனது எதிர்ப்பை காட்டினார். 

அப்பொழுது பேசியவர் “இந்து மதத்திற்கான பூஜை செய்யும் இடமில்லை. கிருத்துவ பாதிரியார் யார் எங்கே? இஸ்லாமிய இமாம் எங்கே? நாத்திகவாதிகள் எங்கே? முதலமைச்சர் ஸ்டாலின் பங்குபெறும் நிகழ்ச்சிகளில் இது போன்ற நடப்பதில்லை. இது திராவிட மாடல் ஆட்சி. இது போன்று நடத்த வேண்டும் என்றால் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களையும் கொண்டுவந்து நடத்துங்கள் ஒரு மதத்தை மட்டும் வைத்து நடத்தக் கூடாது” என பேசி இருந்தார். 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் இத்தகைய நடவடிக்கை பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக பூமி பூஜை விழா நடைபெற்றது. இது தொடர்பான அழைப்பிதழ்களில் பூமி பூஜை விழா என அச்சிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிகளில் தமிழக மின் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் “பூமிபூஜை விழா” என குறிப்பிட்டிருந்ததால் கடுப்பான தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் “கரூர் மாநகராட்சி பார்வைக்கு இந்தியாவூர் மதச்சார்பற்ற நாடு என்று நமது அரசியல் அமைப்பு சட்டம் உள்ள காரணத்தினால் கரூர் இந்தியாவில் அமைந்துள்ள ஓர் மாநகராட்சி என்ற அடிப்படையில் இந்த நிகழ்ச்சிக்கு பெயர் அடிக்கல் நாட்டு விழா அல்லது பணிகள் துவங்கு விழா Ground breaking ceremony” என பதிவிட்டு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதனைக் கண்ட இந்து மத ஆதரவாளர்கள் பலரும் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.