கும்பகோணம்: தஞ்சாவூரில் இருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34 ஏ என்ற அரசு பேருந்தில் மூதாட்டி, ஏறினார். பின்னர் அந்த பேருந்து திருக்கருகாவூர் சென்று திரும்பிய போது அதே பேருந்தில் தஞ்சாவூருக்கு பயணம் செய்தார்.
இதை கவனித்த கண்டக்டர், அந்த மூதாட்டியிடம் காசு கொடுக்காமல் ஓசி என்றால் போயிட்டு போயிட்டு தான் வருவியா என்று கேட்கிறார். இதற்கு அந்த மூதாட்டி பேருந்தில் ஓசி என்று நான் போகவில்லை. இப்படி கோபமா பேசுகிறாய் என பரிதாபமாக பேசுகிறார். இது சமூக வலைத்தளங்களில் பரவியதால் கண்டக்டர் ரமேஷ்குமாரை சஸ்பெண்ட் செய்து அதிகாரி நேற்று உத்தரவிட்டார்.
