சென்னையில், மெட்ரோ ரெயில் நிலையங்களில் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் இரண்டு நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவித்துள்ளதாவது தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் விமான நிலையம், கிண்டி, நந்தனம், ஆயிரம் விளக்கு, மண்ணடி, சென்ட்ரல், பரங்கிமலை, அசோக் நகர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் வரும் நாளை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
மேலும், மெட்ரோ ரெயில்கள் மற்றும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை செல்லும் ரெயிலில் இரவு 7 மணிக்கு மெல்லிசை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதையடுத்து, விம்கோ நகர், வண்ணாரப்பேட்டை, ஆலந்தூர் மெட்ரோ, விமான நிலையம், வடபழனி, கோயம்பேடு, செனாய் நகர், நேரு பூங்கா உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சிகள் ஞாயிற்று கிழமை நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் ஆன் தி ஸ்டீரிட் ஆப் சென்னை கலைக் குழு இணைந்து செய்துள்ளன” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.