கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 20ஆம் தேதியன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், வரும் 18ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வரும் 19ஆம் தேதியன்று தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.