விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக பதிவு சேலம் வாலிபர் ஒரத்தநாட்டில் கைது: என்ஐஏ அதிகாரிகள் அதிரடி

ஒரத்தநாடு: சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி சேர்ந்த அன்பழகன் மகன் கபிலன் (24). இவர், திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துள்ளார். இவர் மீது,சேலம் ஓமனூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கபிலன் தனது கருத்துகளை பதிவு செய்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து இவர் மீது என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு பிரிவு) அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள மண்டலக்கோட்டைக்கு இயற்கை விவசாயியான திருப்பதி (43) என்பவரை பார்க்க சென்றபோது அவரை என்ஐஏ அதிகாரிகள், அதிரடியாக கைது செய்து விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.