7 வயது தமிழக மாணவி 3 உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த பிரபாகரன் – கனிமொழி தம்பதியர். இவர்களுக்கு ரிதன்யா என்ற 7 வயது மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஸ்ரீ கலைமகள் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் சிறுமி ரிதன்யா 42 விநாடிகளில், 35 ஆங்கில நா பிறழ் வாக்கியங்களை (டங் டிவிஸ்டர்) கூறி 3 உலக சாதனை படைத்துள்ளார்.
அந்த வகையில் சிறுமி தன்யாவின் சாதனை, ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்’, ‛அசிஸ்ட் உலக சாதனை’ ‛வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்’, ஆகிய 3 உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது.
இதனையடுத்து சாதனை படைத்த மாணவி ரிதன்யாவுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடத்தி ரிதன்யா மற்றும் அவர்களது பெற்றோர்களை வெகுவாக பாராட்டி கௌரவித்துள்ளனர்.