Avatar Review: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்'..?: ட்விட்டர் விமர்சனம்.!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் இன்று வெளியாகியுள்ளது ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர், உலகம் முழுதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்தப்படம் தமிழ்நாட்டிலும் பிரம்மாண்டமாக ரிலீசாகியுள்ளது. டாப் ஹீரோக்களுக்கு போட்டியாக அதிகாலை ஷோவுடன் இந்தப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

இன்றளவும் பிரம்மிப்பாக பேசப்படும் ‘டைட்டானிக்’ படத்தின் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் படைப்பாக 2009 ஆம் ஆண்டு வெளிவந்த “அவதார்” படம், உலக சினிமாவில் அதுவரை இருந்த அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்து, 23 ஆயிரம் கோடிகளை குவித்து உலகளவில் அதிக வசூல் ஈட்டியது. இந்தியாவில் மட்டும் 100 கோடிகளைக் கடந்து வசூல் ஈட்டியது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

13 ஆண்டுகளுக்குப் பிறகு, அவதார் படத்தின் இரண்டாம் பாகமான “Avatar: The Way Of Water” படம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இரண்டாம் பாகத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Pathaan Controversy: தீபிகா படுகோனே காவி உடை சர்ச்சை: பிரபல தமிழ் நடிகர் பரபரப்பு கருத்து.!

இந்நிலையில் இன்று அதிகாலையிலே படத்தை பார்த்த ரசிகர்கள், பிரம்மாண்டத்தின் உச்சம் என கமெண்ட் அடித்து வருகின்றனர். எதிர்பார்ப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் வேறலெவலில் படம் இருப்பதாகவும், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் டெக்னிக்கலாக மிகவும் ஸ்ட்ராங்காக இருப்பதாகவும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

Varisu VS Thunivu: அஜித்தை விட விஜய் தான் டாப்: ‘வாரிசு’ தயாரிப்பாளர் பேச்சால் வெடித்த சர்ச்சை.!

மேலும் 3 மணி நேரத்திற்கு நம்மை வேறு உலகிற்கு ஜேம்ஸ் கேமரூன் அழைத்து சென்றுள்ளதாகவும், 13 வருட காத்திருப்புக்கு மிகப்பெரிய விஷுவல் ட்ரீட் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். உலகம் முழுதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில், 160 மொழிகளில் வெளியாகியுள்ளது ‘அவதார்’. இந்தியாவில் மட்டும் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் மூன்றாயிரம் திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.