காலாவதியான பாபா திரைப்படம் மீண்டும் தோல்வியை சந்தித்திருப்பதாக ப்ளூசட்டை மாறன் தெரிவித்துள்ளார்.
பாபா திரைப்படம்ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபா. இதில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, விஜயகுமார், சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப்படத்தை ரஜினியின் அண்ணாமலை, வீரா, பாட்ஷா ஆகியப் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.Captain Vijayakanth: எலும்பும் தோலுமாய் இருக்கும் விஜயகாந்த்.. லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து கண்ணீர் விடும் ரசிகர்கள்!
பணத்தை திருப்பிக்கொடுத்த ரஜினிபாபா திரைப்படத்தை ரஜினிகாந்துதான் தயாரித்து இருந்தார். பாபா திரைப்படம் வெளியான போது 107 திரையரங்குகளில் 50 நாட்களும், 8 திரையரங்குகளில் 100 நாட்களும் ஓடியது. இத்தனை நாட்கள் ஓடிய திரைப்படம் வெற்றிப்படமே ஆகும். ஆனால் பாபா திரைப்படம் வசூலை விட அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டதால் திரையரங்க உரிமையாளர்கள் நஷ்டத்தை சந்தித்தனர். இதனால் நஷ்டமடைந்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்தார் ரஜினிகாந்த்.கல்யாணத்துக்கு பிறகுதான் மகாலட்சுமிக்கு இப்படி நடக்குது!
20 ஆண்டுகள் கழித்துஇந்நிலையில் 20 ஆண்டுகள் கழித்து நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு இப்படத்தை மாற்றியமைத்து உள்ளனர். இப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் புதிதாக டப்பிங் பேசினார். படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் நீக்கப்பட்டன. சில காட்சிகள் மாற்றப்பட்டன. ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான இப்படத்தை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.Mahalakshmi: அல்வாவை விட ஸ்வீட் போங்க… எச்சில் ஊற வைக்கும் மகாலெட்சுமி!
சீண்டிய ப்ளூ சட்டை மாறன்பாபா திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் 80 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்து உள்ளது. கர்நாடகாவில் 7.5 லட்சமும், வெளிநாடுகளில் மொத்தமாக 50 லட்சம் ரூபாய் வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியானது. இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 2 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறுது. இந்நிலையில் பாபா திரைப்படத்தை காலாவதியான படம் என்றும் மீண்டும் தோல்வி அடைந்தது என்றும் கூறி சீண்டியுள்ளார் இயக்குநரும் யூட்யூப் விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன்.Regina Cassandra: லவ் யூ பாப்பா… ரெஜினாவிடம் ப்ரபோஸ் செய்த மாநகரம் பட நடிகர்!
வயசானவங்க மட்டும் தான்இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், காலாவதியான ‘பாபா’ திரைப்படம் மீண்டும் தோல்வியடைந்தது. சில மூத்த குடிமக்கள் தான் படத்தை பார்த்து வருகிறார்கள். இளைய தலைமுறையினர் படத்தை நிராகரித்து விட்டனர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் ரஜினியின் தனிப்பட்ட நம்பிக்கை, பயமுறுத்தும் அறிவுரைகள், வேடிக்கையான அரசியல் பஞ்ச்கள் அடங்கிய படத்தைப் பார்க்க யாரும் ஆர்வம் காட்டவில்லை என்றும் சாடியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.Nayanthara: அந்த வேலை மட்டுமில்ல.. தமிழ் சினிமாவில் இந்த வேலையும் செய்த நயன்தாரா!
பொறாமையில பேசாதீங்கப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டை பார்த்த ரஜினி ரசிகர்கள், பொறாமையிலும் வயிற்றெரிச்சலிலும் பேசாதீர்கள் என ப்ளூ சட்டை மாறனை விளாசி வருகின்றனர். எந்தப் படமாக இருந்தாலும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன். குறிப்பாக ரஜினிகாந்த், அஜித் போன்ற டாப் நடிகர்களை மோசமாக விமர்சிப்பதையும் உருவ கேலி செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.Pathaan: அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாக பாடுவதை தீபிகா படுகோன் 30 நொடியில் செய்துவிட்டார்.. நக்கலடிக்கும் கஸ்தூரி!
ப்ளூ சட்டை மாறனுக்கு கண்டனம்இரவின் நிழல் படத்தை வைத்து பார்த்திபனை கடுமையாக விமர்சித்திருந்தார் ப்ளூ சட்டை மாறன். அதற்கு பார்த்திபனும் தக்க பதிலடி கொடுத்து வந்தார். எல்லை மீறி வசைபாடி விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை மாறனுக்கு சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.Director Bala: அம்மாவுக்கு செய்ய வேண்டிய கடைசி கடமையை கூட செய்யவிடல… பாலாவுக்கு வயிறு எரிந்து சாபம் விட்ட நடிகர்!