அவதார் – தி வே அஃப் வாட்டர் (ஆங்கிலம், தமிழ்…)

கடந்த 2009-ம் ஆண்டு மிகவும் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ‘அவதார்’. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலில் பெரும் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ 3டி தொழில்நுட்பத்துடன் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இன்று (டிசம்பர் 16-ம் தேதி) சோலோவாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்
அரியிப்பு (Ariyippu) மலையாளம் – Netflix

இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், பைசல் மாலிக், திவ்ய பிரபா, டேனிஷ் உசேன், லவ்லீன் மிஸ்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அரியிப்பு (Ariyippu)’. இத்திரைப்படம் டிசம்பர் 16-ம் தேதி (இன்று) ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
Govinda Naam Mera (இந்தி – Disney Plus Hotstar)

விக்கி கௌஷல், கியாரா அத்வானி, பூமி பெட்னேகர், வருண் தவான், ரன்பீர் கபூர் (கௌரவத் தோற்றம்) உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் ‘Govinda Naam Mera’. இயக்குநர் ஷஷாங்க் கைதான் இயக்கியுள்ள இத்திரைப்படம் டிசம்பர் 16-ம் தேதி (இன்று) ‘Disney Plus Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
The Big Four (ஆங்கிலம் – Netflix)

டிமோ ட்ஜாஜந்தோ இயக்கத்தில் அபிமானா ஆர்யசத்யா, லுடேஷா, கிறிஸ்டோ இம்மானுவேல், மிச்செல் தஹாலியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் ‘The Big Four’. இத்திரைப்படம் டிசம்பர் 15-ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
I Believe in Santa (ஆங்கிலம் – Netflix)

இயக்குநர் அலெக்ஸ் ரணரிவேலோ இயக்கத்தில் ஜான் டியூசி, கிறிஸ்டினா மூர், வயலட் மெக்ரா, லதீபா ஹோல்டர், ப்ரூக் டில்மேன், மேத்யூ கிளேவ், பாக்ஸ்டன் பூத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘I Believe in Santa’. இத்திரைப்படம் டிசம்பர் 14-ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Bardo, False Chronicle of a Handful of Truths (ஸ்பேனிஷ் – Netflix)

புகழ்பெற்ற இயக்குநர் Alejandro Gonzalez Iñarritu இயக்கத்தில் டேனியல் கிமினெஸ் காச்சோ, ஜிமெனா லாமட்ரிட், கிரிசெல்டா சிசிலியானி, ஃபேபியோலா குஜார்டோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bardo, False Chronicle of a Handful of Truths’. ஸ்பேனிஷ் மொழித் திரைப்படமான இப்படம் டிசம்பர் 16ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The Banshees of Inisherin (ஆங்கிலம் – Disney Plus Hotstar)

மார்ட்டின் மெக்டொனாக் இயக்கத்தில் கொலின் ஃபாரெல், பிரெண்டன் க்ளீசன், கெர்ரி காண்டன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Banshees of Inisherin’. இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 14-ம் தேதி ‘Disney Plus Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Detective Knight: Redemption (ஆங்கிலம் – Apple TV)

எட்வர்ட் டிரேக் இயக்கத்தில் பால் ஜோஹன்சன், புரூஸ் வில்லிஸ், கோரி லார்ஜ், மிராண்டா எட்வர்ட்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Detective Knight: Redemption’. இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 13-ம் தேதி ‘Apple TV’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Strong Fathers, Strong Daughters (ஆங்கிலம் – Zee5)

டேவிட் டி வோஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ‘Zee5‘ ஓடிடி தளத்தில் கடந்த டிசம்பர் 12-ம் தேதி வெளியாகியுள்ளது. இதில் பார்ட் ஜான்சன், ராபின் லைவ்லி, கைலா டிவெனெரே, ஆர்டன் மைரின், டேவிட் பாரெரா, கேரி வாம்ப்ளர், மரியா கால்வாய்கள்-பரேரா, பால் புட்சர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Half Pants Full Pants (ஆங்கில வெப்சிரீஸ் – Amazon Prime)

வி.கே.பிரகாஷ் இயக்கத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சோனாலி குல்கர்னி, அஷ்வந்த் அசோக் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சிரீஸ் ‘Half Pants Full Pants’. இந்த வெப்சிரீஸ் டிசம்பர் 16-ம் தேதி (இன்று) ‘Amazon Prime’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
The Recruit (இந்தி – Netflix)

ஜோர்டான் காக்னே இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப்சிரீஸ் டிசம்பர் 16-ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. நோவா சென்டினியோ, லாரா ஹாடாக், ஆர்த்தி மான், ஃபைவல் ஸ்டீவர்ட், கேத்தரின் கிங் சோ உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Physics Wallah

அபிஷேக் தன்தாரியா இயக்கத்தில் அனுராக் அரோரா, ராதா பட், ஸ்ரீதர் துபே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சிரீஸ் ‘Physics Wallah’. இந்த வெப்சிரீஸ் கடந்த டிசம்பர் 13-ம் தேதி ‘Amazon Prime’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தியேட்டர் டு ஓடிடி
கலகத் தலைவன் (தமிழ் – Netflix)

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் திரையரங்கில் வெளியாகியிருந்த ‘கலகத் தலைவன்’ திரைப்படம் டிசம்பர் 16-ம் தேதி (இன்று) Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Doctor G (இந்தி – Netflix)

ஆயுஷ்மான் குரானா, ரகுல் ப்ரீத் சிங், ஷெபாலி ஷா மற்றும் ஷீபா சத்தா ஆகியோர் நடிப்பில் அனுபூதி காஷ்யப் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Code Name: Tiranga (இந்தி-Netflix)

ரிபு தாஸ்குப்தா இயக்கத்தில் பரினீதி சோப்ரா, ஹார்டி சந்து மற்றும் ஷரத் கேல்கர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த அக்டோபர் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Ananta (பெங்காலி)

மைக்கேல் ஜியுடித், ஃபெரோ வாலன்டோவ், ஜோசபின் ஃபர்ம்ஸ்டோன் உள்ளிட்டோர் நடிப்பில் ரிஸ்கி பால்கி இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.