சென்னை: ஆவின் பொருட்கள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”தமிழ்நாட்டில் ஆவின் வெண்ணெய் விலை அரை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராமுக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டிருக்கிறது. நெய் விலை நேற்று லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்ட நிலையில், வெண்ணெய் விலையையும் ஆவின் உயர்த்தியிருப்பது மக்களை கடுமையாக பாதிக்கும்.
தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் ஆவின் பால் பொருட்களின் விலை பலமுறை கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வை ஆவின் நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆவின் வெண்ணெய் விலை அரை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராமுக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டிருக்கிறது. நெய் விலை நேற்று லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்ட நிலையில், வெண்ணெய் விலையையும் ஆவின் உயர்த்தியிருப்பது மக்களை கடுமையாக பாதிக்கும்!(1/2)