ஓயாத பக்தர் கூட்டம் ஓய்வில்லா சரணகோஷம் – பக்தர் வெள்ளத்தில் திக்குமுக்காடும் சபரிமலை

சபரிமலையில் இந்த ஆண்டு நடை திறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலான 30 நாட்களில் 21 லட்சத்து 71 ஆயிரத்து 452 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். அவர்களில், நேற்று வரை 19 லட்சத்து 38 ஆயிரத்து 452 பேர் தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலையில் நேற்று மட்டும் (வெள்ளிக்கிழமை) 93,456 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்த நிலையில், 80,190 பேர் தரிசனம் செய்துள்ளனர். சனிக்கிழமையான இன்று 90,287 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். இரவுக்குள் பதிவு செய்தவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் தரிசனத்திற்காக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
image
சபரிமலை வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் பதினெட்டாம் படி ஏற்றி விடுவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. பக்தர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நாள்தோறும் கேரளாவில் பிரபலமான வாத்திய கலைஞர்கள் பங்கேற்கும் கேரளாவின் பாரம்பரிய ‘செண்டை மேளம்’ இசை எழுப்பப்பட்டு வருகிறது.
image
பக்தர்கள் வருகை அதிகரிப்பை தொடர்ந்து அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கேரளா அரசு துறைகளும், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.