கரூர் மாவட்ட துணை சேர்மன் பதவிக்கான தேர்தலை டிச.19-ம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலர் நடத்தலாம் என உயநீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது. தேர்தல் முடிந்த பின் வாக்குகளை எண்ணலாம், ஆனால் இறுதி உத்தரவு வரும் வரை முடிவை வெளியிடக்கூடாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் கரூர் மாவட்ட துணை சேர்மன் தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
