கிருஷ்ணகிரியில் கஞ்சா போதையில் ரீல்ஸ் செய்து போலீசுக்கு சவால்விட்ட இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி, பழையபேட்டை பகுதியில் அதிகளவில் கஞ்சா புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் கஞ்சா சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழைய பேட்டை பேருந்து நிலையம் அருகே கஞ்சா புகைத்த படி புள்ளீங்கோ இளைஞர் ஒருவர் ரீல்ஸ் செய்து கொண்டிருந்தார்.
அந்த கஞ்சா குடிக்கி இளைஞரை பயிற்சி உதவி காவல் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் போலீசார் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் பழையபேட்டை கொத்தப்பேட்டா காலனியை சேர்ந்த அசோக் என்பதும் அவர் மீது ஏற்கனவே மூன்று அடிதடி வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
செல்போனை ஆய்வு செய்த போது, அசோக், தன்னை ஒரு கேங்ஸ்டர் போல காட்டிக் கொண் டு லெக்கின் ஜீன்ஸ் போட்டுக் கொண்டு ரீல்ஸ் செய்து வந்தது தெரியவந்தது.
கஞ்சா அடிப்பது போன்றும், கஞ்சா செடியின் அருகில் இருந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதும், மேலும் காவல்துறையினருக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் ரீல்ஸ் செய்திருப்பதும் கண்டுபிடித்தனர்.
இதன் அடிப்படையில் அசோக் மீது வழக்கு பதிந்து கிருஷ்ணகிரி நகர போலீசார் கைது செய்தனர்.
ரீல்ஸ் என்ற பெயரில் தான் செய்த அலும்புகளுக்கு கையெடுத்துக் கும்பிட்டு வருத்தம் தெரிவித்தார் கைப்புள்ள அசோக்..
இதற்க்கிடையே போலீசார் அசந்த நேரம் பார்த்து காவல் நிலையத்தில் இருந்து கஞ்சா புள்ள அசோக் தப்பி ஓடி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.