சூப்பர் ஸ்டாரின் ‘முத்துவை’ வீழ்த்திய RRR; ஜப்பானில் சாதனை வசூல்!

எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ பாக்ஸ் ஆபிஸ் வருவாயைப் பொறுத்தவரை தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது. உலகளாவிய ரசிகர்களின்  ஆதரவை பெற்ற பிறகு, அக்டோபரில் ஜப்பானில் பிரம்மாண்டமாக திரையிடப்பட்டது. இந்நிக்லையில்,  இரண்டு மாதங்களுக்குள் இப்படம் இப்போது ஜப்பானில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த திரைப்படம், 24 ஆண்டுகளாக ஜப்பான் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் இருந்த ரஜினிகாந்த் நடித்த ‘முத்து’ திரைப்படத்தை வீழ்த்தியுள்ளது.

இப்படம் ஜப்பானிய பாக்ஸ் ஆபிஸில் தோராயமாக JPY 403 மில்லியன் (ரூ. 24 கோடி) சம்பாதித்து புதிய சாதனையை படைத்துள்ளது. ரஜினிகாந்தின் 1995 திரைப்படமான ‘முத்து’ ஜப்பானில் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படமாகும், JPY 400 மில்லியன் (தோராயமாக 23.5 கோடிகள்) வசூல் செய்தது.

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் சர்வதேச ரசிகர்களின் அபரிமிதமான அன்பைப் பெற்று சாதனை படைத்து வருகிறது. மேலும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் RRR திரைபடம் சமீபத்தில் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தெலுங்கு படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

இந்தப் படம் இரண்டு பிரிவுகளில் பரிந்துரைகளைப் பெற்றது: சிறந்த ஆங்கிலம் அல்லாத மொழித் திரைப்படம் மற்றும் சிறந்த  பாடல் ‘நாட்டு நாட்டு.’ இது மட்டுமின்றி, இந்த படம் விமர்சகர்களின் சாய்ஸ் விருதுகளில் ஐந்து விருதுகளையும் பெற்றுள்ளது.

CCA இல், ‘RRR’ பின்வரும் பிரிவுகளில் விருதுகளை குவித்துள்ளது: ‘சிறந்த படம்,’ ‘சிறந்த இயக்குனர்’, ‘சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்’ மற்றும் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம் மற்றும் சிறந்த பாடல்’.

‘ஆர்ஆர்ஆர்’ இரண்டு பழங்குடித் தலைவர்கள் மற்றும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான அவர்களின் போராட்டம் பற்றிய கற்பனையான கதை. இப்படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரியா சரண் ஆகியோரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | நாட்டை விட்டு ஓடிய கத்தார் இளவரசி… காரணம் என்ன! 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.