திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த 15ம் தேதி கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதிகாரிகள் முன்னிலையில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் காணிக்கை பணத்தை எண்ணினர். இதில், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் வெற்றிவேல்(35), பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நாணயங்களை மறைத்து எடுத்து சென்றது விசாரணையில் உறுதியானது. 30 கிராம் எடையுள்ள 5 தங்க காசுகளை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே, வெற்றிவேலை சஸ்பெண்ட் செய்து, இந்து சமய அறநிலையத்துறை நேற்று உத்தரவிட்டது.
