சென்னை: விவசாய நிலங்களை அழிக்காத தொழிற்சாலைகள் வேண்டும். தரிசு நிலங்களை மட்டுமே தொழிற்பூங்காவுக்கு எடுப்போம் என்ற தமிழக அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தென் தமிழகத்துக்கு நிறைய தொழிற்சாலைகள் வரவேண்டும், ஆனால் அதேநேரம் விவசாயிகள் பாதிக்க கூடாது என அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அண்ணாமலை கூறினார்.
