சென்னை: சென்னையின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் ஆந்திரா, கர்நாடகா செல்லக்கூடிய பேருந்துகள் வசதிக்காகவும் 24.8 ஏக்கரில் ரூ.336 கோடி மதிப்பில் சென்னையின் 4வது புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கீழ் திருமழிசை அருகே அமையவுள்ள பேருந்து நிலையம் 2023-க்குள் தயாராகும். 25 ஏக்கரில் ரூ.307 கோடி செலவில் அமையவிருக்கும் பேருந்து நிலையத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
