துணிவு Vs வாரிசு… எனக்கு பயமாக இருக்கிறது – சரண்டர் ஆன தில்ராஜு

அஜித் நடித்த துணிவு படமும், விஜய் நடித்த வாரிசு படமும் பொங்கலுக்கு ஒன்றாக வெளியாகிறது. இதனால் இரண்டு பேரின் ரசிகர்களும் இப்போதிருந்தே சமூக வலைதளங்களில் மோதிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் அவர்களின் மோதலுக்கு தீனி போடும் வகையில் வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜு தெலுங்கு சேனலுக்கு அளித்த பேட்டியில், “நான் தயாரிக்கும் ‘வாரிசு’ படத்துடன் அஜித் நடிக்கும் படமும் தமிழ்நாட்டில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் விஜய் நம்பர் ஒன் ஸ்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டை பொறுத்தவரை 800க்கும் மேற்பட்ட திரைகள் உள்ளன. நான் அவர்களிடம் எனக்கு 400க்கும் மேற்பட்ட திரைகள் தருமாறு கெஞ்சிக்கொண்டிருக்கிறேன். இது வியாபாரம்.

என் படமும் பெரிய படமாக இருக்கும் நிலையிலும் நான் திரைகளுக்காக கெஞ்ச வேண்டியிருக்கிறது. இது ஒன்றும் ஒருத்தருக்கான உரிமை கிடையாதுதானே? ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் உதயநிதி ஸ்டாலின் அஜித்தின் ‘துணிவு’ படத்தை வெளியிடுகிறார். விரைவில் சென்னைக்கு சென்று அவரிடம் எனக்கு கூடுதல் திரைகளை ஒதுக்குமாறு கேட்கப்போகிறேன். நடிகர் விஜய், அஜித்தை விட பெரிய ஸ்டார்” என கூறினார்.

அவரது இந்தப் பேச்சு கடும் எதிர்வினைகளை சந்தித்தது. இந்தச் சூழலில் வாரிசு படத்தை சென்னை, செங்கல்பட்டு, கோவை, தென் ஆற்காடு, வட ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது.

இந்நிலையில் அஜித் குறித்து சர்ச்சையான கருத்தை கூறிய தில்ராஜு தற்போது விளக்கமளித்துள்ளார். அவர் பேசுகையில், “மீடியா முன்னாடி பேச வேண்டும் என்றாலே பதட்டமாகுது. நான் என்ன பேசினாலும் சர்ச்சை ஏற்படுத்திவிடுகிறார்கள். சமீபத்தில் நான் ஒரு சேனலுக்கு 45 நிமிடம் பேட்டி கொடுத்திருந்தேன். ஆனால் அதிலிருந்து ஒரு 20 செகன்டை மட்டும் எடுத்து போடுகிறார்கள். அதற்கு முன்னாடி பின்னாடி என்ன பேசியிருந்தேன் என்று முழுவதும் தெரியாமல் சமூக வலைதளத்தில் வைரல் செய்து விட்டார்கள்.

அந்த பேட்டியை முழுவதும் பார்த்திருந்தால் நான் என்ன பேசினேன் என்று தெரியும். மீடியாவிடம் நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் அந்த 20 நொடிகள் வீடியோவை மட்டும் வைத்து முடிவு எடுக்காதீர்கள். ஒருவரை நக்கல் செய்வதிலோ கிண்டல் செய்வதிலோ எனக்கு உடன்பாடில்லை. சினிமாவில் இன்னும் நான் சாதிக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.