பரமக்குடி: பரமக்குடி காந்திநகர் உய்யவந்தான் அம்மன் ஆலய ஊரணி 12 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் 10 ஊரணிகள் இருந்துள்ளன. காலபோக்கில் ஊரணிகள் மறைந்து, தற்போது பரமக்குடியில் இரண்டு ஊரணிகள் மட்டுமே உள்ளன.
இதில் காந்திநகர் உய்ய வந்தான் அம்மன் ஆலய ஊரணி 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த ஊரணியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.66 லட்சம் ஒதுக்கீடு செய்து ஊரணி தூர்வரும் பணிகள் பூமிபூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ஊரணியின் கரைகளை பலப்படுத்தி, அலங்கார கற்கள் பதித்து, இருக்கைகள், மின்விளகுகள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, ஆணையாளர் திருமால் செல்வம், காந்திநகர் நகரமன்ற உறுப்பினர் பாக்கியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு ஊரணி தூர்வாரும் பணியை தற்போதைய அரசு தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.