பாகிஸ்தான் பெண் உளவாளி காதல் வலையில் சிக்கி ரகசிய தகவல்களை பகிர்ந்த இந்திய அரசு ஊழியர்! பகீர் பின்னணி


பாகிஸ்தான் பெண் உளவாளி விரித்த காதல் வலையில் சிக்கி முக்கியமான ரகசிய தகவல்களை பகிர்ந்த இந்திய அரசாங்க ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேஸ்புக் மூலம் அறிமுகம்

இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரவி செளராசியா. இவர் கதாரா என்ற பகுதியில் பதிவுத்துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கு முன்னதாக ரவி சென்னை ஆவடியில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையமான ODFஇல் கிளார்க்காக வேலை செய்தார்.

இது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிற்சாலை ஆகும். பணியின் போது பேஸ்புக் மூலம் மூலம் ஷான்வி சர்மா என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பெண் உளவாளி காதல் வலையில் சிக்கி ரகசிய தகவல்களை பகிர்ந்த இந்திய அரசு ஊழியர்! பகீர் பின்னணி | Government Clerk Who Gave Confidential Information

satlokexpress

ரகசிய தகவல்களை கசியவிட்டு விதிமுறை மீறல்

இந்த பெண்ணுடனான நட்பு நாளடைவில் நெருங்கிய பழக்கமான நிலையில், அவர் ரவியை தனது காதல் வலையில் ஹனி ட்ராப் பாணியில் வீழ்த்தியுள்ளார். அந்த பெண் பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ ஏஜென்ட் எனவும், போலி அடையாளத்தில் தன்னுடன் பழகி வருகிறார் என்பதும் ரவிக்கு பின்னால் தெரியவந்துள்ளது.

இருப்பினும், பணத்திற்கு ஆசைப்பட்டு தான் வேலை பார்த்த இடத்தின் ரகசிய தகவல்களை அந்த பெண்ணிடம் ரவி அரசு விதிமுறைகளை மீறி பகிர்ந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் அங்கிருந்து இடம் மாறுதல் பெற்ற ரவி பீகார் பதிவுத்துறையில் பணியாற்றி வருகிறார்.

இந்த சதிச்செயலை சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்து ரவியை கைது செய்துள்ளனர். மேலும், ரவியின் செல்போனை கைப்பற்றிய காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

பாகிஸ்தான் பெண் உளவாளி காதல் வலையில் சிக்கி ரகசிய தகவல்களை பகிர்ந்த இந்திய அரசு ஊழியர்! பகீர் பின்னணி | Government Clerk Who Gave Confidential Information

newstracklive



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.