டெல்லி: பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பில்கிஸ்பானு தாக்கல் செய்த மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. குற்றவாளிகளை விடுவிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் உள்ளது என கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து பில்கிஸ்பானு மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
