புதுடில்லி: குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று(டிச.,17) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த 2002ல் நடந்த குஜராத் கலவரத்தின் போது, பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது 3 வயது மகள் உட்பட குடும்பத்தினர் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைதானவர்களில் 11 பேருக்கு, 2008ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது; உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது.கடந்த 18 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த குற்றவாளிகள் 11 பேரும், கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தையொட்டி குஜராத் மாநில அரசால் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானு மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், இன்று(டிச.,17) உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் விக்ரம் நாத் அமர்வு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் பில்கிஸ் பானு அளித்த மறுஆய்வு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement