ஸ்ரீ வில்லிபுத்தூர்: அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைப்பதே நமது இலக்கு எனப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகாபுரியில் புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா மாநாடுநேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் ஆசியுரை வழங்கினார்.
மாநாட்டில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் பேசினர். புதிய தமிழகம்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேசியதாவது:
தமிழகம் தற்போது சித்தாந்த அச்சுறுத்தலில் உள்ளது. 26-வது ஆண்டில் நமது பயணம்அனைத்து சமுதாய மக்களின்ஒற்றுமைக்காக குரல் கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும். ஜாதி மோதலை விட்டுவிட்டு அனைத்து சமுதாய மக்களை ஒன்றிணைத்து செயல்பட வேண்டும்.
கடந்த 25 ஆண்டுகளில் புதிய தமிழகம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதை தக்க வைக்க அரசியல் அதிகாரம் வேண்டும். அதற்கு அனைத்து சமுதாயத்தின் ஒற்றுமை அவசியம். இனி யாரையும், எந்த சமுதாயத்தையும் பகையாகப் பார்க்கக் கூடாது. நாம் அனைவரும் தமிழன், இந்து என ஒன்றிணைய வேண்டும். நான் நமது நட்பு சக்திகளை உங்களுக்கு அடையாளம் காட்டி உள்ளேன். அவர்களோடு இணைந்து இனி வரும் தேர்தல்களை நாம் சந்திக்க வேண்டும் என்றார்.
மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜு, பாஜகமாநில செயலாளர் பொன்பாலகணபதி, இந்திய மக்கள்கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன், முத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவர் செல்வகுமார், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா, பாமக மாநில பொருளாளர் திலகபாமா, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன், விஸ்வ இந்து பரிஷத் நிறுவனர் வேதாந்தம், விஸ்வகர்மா கூட்டமைப்பு நிறுவனர் பாபுஜி,பல்வேறு சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர்.