சென்னை: திமுக முன்னாள் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா புகைப்பட கண்காட்சியை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பேராசிரியர் அன்பழகன் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ஈடுபட்ட புகைப்படங்களை முதல்வர் பார்வையிட்டார்.
