வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கடந்த ஆண்டை போல், இந்தாண்டிலும், வாடிக்கையாளர்களால் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது.
இணையவழியில் உணவு விநியோகம் செய்யும் ஸ்விக்கி நிறுவனம் ஆண்டுதோறும் மக்களால் அதிகம் விரும்பி ஆர்டர் செய்யந்நவும் உணவு வகைகளை பட்டியலிட்டு வருகிறது. அந்த பட்டியலில் இந்த ஆண்டும் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.
சைவமோ, அசைவமோ, பிரியாணி ஆர்டர் செய்பவர்களின் எண்ணிக்கை மட்டும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையே இது காட்டுவதாக ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது. ஒரு நொடிக்கு 2.28 பிரியாணி வீதம், ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பட்டியலில் 7 வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்து 2வது இடத்தில், மசாலா தோசை, அதிக வாடிக்கையாளர்களால் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பன்னீர் பட்டர் மசாலா, பட்டர்நான் , வெஜ் பிரியாணி, பிரைட் ரைஸ், தந்தூரி சிக்கன் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளதாகவும், குஜி, மெக்ஸிகன் பெளல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட சர்வதேச உணவுகளும் அதிகளவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
நொறுக்கு தீனி பிரிவில் சமோசா முதலிடத்தையும், பாப்கார்ன் 2வது இடத்தையும் பிடித்துள்ளது. இதற்கு அடுத்து பாவ் பாஜி, பிரெஞ்ச் பிரை, கார்லிக் பிரெட்ஸ்டிக்ஸ் ஆகிய உணவுகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், இந்தியர்களிடையே பிரியாணிக்கு உள்ள மவுசு குறையவில்லை என்பது தெரியவந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement