புதுடில்லி, புதுடில்லியில், ஐந்தாம் வகுப்பு மாணவியை கத்திரிக்கோலால் தாக்கியதுடன், முதல் மாடியில் இருந்து துாக்கி வீசிய ஆசிரியையை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மத்திய டில்லியில் பிராத்மிக் வித்யாலயா என்ற மாநகராட்சி பள்ளி உள்ளது.
இங்கு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை, ஆசிரியை கீதா தேஷ்வால் கத்திரிக்கோலால் தாக்கிஉள்ளார்.
மேலும் அவர், அம்மாணவியை முதல் தளத்தில் இருந்து துாக்கி வீசி எறிந்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த மாணவி, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தகவலறிந்த பொதுமக்கள் ஏராளமானோர், பள்ளி முன் திரண்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், ஆசிரியை மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்த போலீசார், அவரை கைது செய்து, எதற்காக மாணவியை தாக்கினார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆசிரியை கீதா தேஷ்வாலை, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement