விக்ரமன் செஞ்சத கட் பண்ணிட்டாங்க – ஆயிஷாவின் குற்றச்சாட்டு?

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆயிஷா பிக்பாஸ் வீட்டில் நடந்த சுவாராசியமான சம்பவங்கள் பற்றி தொடர்ச்சியாக பேட்டி கொடுத்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் அனைத்து சம்பவங்களும் வெளியில் காட்டப்படுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த வகையில், ஆயிஷா எலிமினேட் என்று அறிவிக்கப்பட்ட போது விக்ரமன் எழுந்து கைத்தட்ட ஆயிஷா வருத்தமடைந்திருக்கிறார். ஆனால், விக்ரமன் கைத்தட்டிய காட்சி தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் போது காட்டப்படவில்லை. அதன்பிறகு ஆயிஷாவை சமாதானம் செய்ய விக்ரமன் முயற்சித்த காட்சிகள் மட்டும் ஒளிபரப்பாகியுள்ளது. அவ்வாறாக, 'ஜனனி சேவ் ஆனதற்கு தான் கைதட்டினேன்' என்று விக்ரமன் சொல்ல ஆயிஷா முகத்தில் அரைந்தாற் போல் 'புரியது விக்ரம்' என்று மட்டும் சொல்லி கடந்துவிடுவார்.

ஆயிஷா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும் கதவருகில் நின்று விக்ரமன் மீண்டும் தன்னை புரிய வைக்க முயற்சிப்பார், அப்போதும் ஆயிஷா அதை பெரிதாக கண்டுகொள்ளமாட்டார். இதைதான் ஆயிஷா தனது பேட்டியில் சொல்லி வருகிறார். மேலும், விக்ரமன் கேமரா முன்னால் மட்டும் தான் நல்லவராக நடிக்கிறார் என்றும் புகார்கள் எழுந்துள்ளது. ஒருவேளை ஆயிஷா சொல்வது போல் விக்ரமன் கைத்தட்டியது காண்பிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் அது அவருக்கு நெகட்டிவாக அமைந்திருக்கும். ஆனால், பிக்பாஸ் விக்ரமனின் மோசமான செயல்களை ஒளிபரப்பாமல் அவரை சேவ் செய்து வருகிறார் என ரசிகர்கள் தற்போது விமர்சித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.