வாரிசு படம் படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் வெளிநாடு புக்கிங் ஓபன் செய்யப்பட்டுள்ளது. யுகேவில் முன்பதிவு திறக்கப்பட்ட 24 மணி நேரத்தில் சுமார் 2000 ஆயிரத்துக்கும் அதிகமான முன்பதிவுகள் புக்காகியுள்ளதாம். அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டிவிட்டர் பக்கதில் அறிவித்துள்ளது. இன்னும் 4 வார காலம் இருக்கும் நிலையில் இப்போதே இந்த முன்பதிவுகள் பரபரப்பாக சென்றுகொண்டிருப்பதால், இன்னும் வரும் நாட்களில் புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாரிசு ரிலீஸ்
தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் வாரிசு. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருக்கிறார். பொங்கல் வெளியீடாக தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது. ஆனால், இப்போதைக்கு தியேட்டர் பிரச்சனை தொடர்பான சிக்கல் வாரிசுக்கு எழுந்திருக்கிறது.
வாரிசுக்கு சிக்கல்
தமிழகத்தில் விஜய்யின் வாரிசு படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படம் ரிலீஸாக இருக்கிறது. இரண்டு மிகப்பெரிய ஸ்டார்களின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸாவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியாக இருந்தாலும், பிஸ்னஸ் ரீதியாக சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. அஜித்தின் துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுவதால், அந்த நிறுவனம் பெரும்பாலான தியேட்டர்களை லாக் செய்து வைத்திருக்கிறது. அதனால், வாரிசு படத்துக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை.
வாரிசு படக்குழு அதிருப்தி
இதனால் வாரசு படக்குழு அதிருப்தியில் இருக்கிறது. இது குறித்து அண்மையில் பேசிய வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூ, வாரிசு படத்துக்கு போதுமான தியேட்டர்கள் கிடைப்பதை உறுதி செய்ய உதயநிதி ஸ்டாலினிடம் பேச இருப்பதாக தெரிவித்தார். அவரிடம் பேசி வாரிசு படத்துக்கு இருக்கும் தியேட்டர் ஒதுக்கீடு சிக்கல் தீர்க்கப்படும் என்றும் கூறினார். தில்ராஜூ அப்படி கூறினாலும், போதுமான அளவில் தியேட்டர் ஒதுகீடு கிடைக்குமா? என்பது சந்தேகம் என தெரிவித்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள் வாரிசு ரிலீஸை ஒத்திவைப்பது நல்லது என கருத்து தெரிவித்துள்ளனர்.