காத்தாரில் நடைபெறும் உலக கால்பந்து போட்டியை போல் இந்தியாவிலும் போட்டி நடத்தப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் வடகிழக்கு மாநிலங்களில் கவுன்சில் பொன்விழா கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் பேசும்போது, கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியை இந்தியர்கள் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், களத்தில் உள்ள வெளிநாட்டு வீரர்களின் திறனை கவனித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இந்திய இளைஞர்கள் மீது தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும், கத்தாரில் இப்போது நடைபெற்று வரக்கூடிய இதே போன்ற போட்டியை இந்தியா நடத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூற முடியும் என பேசினார்.
கால்பந்து போட்டிகளில் ரெட் கார்ட்டுகள் கொடுக்கப்படுவது போல வட கிழக்கு மாநிலங்களிலும் வளர்ச்சிக்கு தடைகளாக இருந்தவைகளுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டுள்ளது என கால்பந்து போட்டியை சுட்டிக்காட்டி நகைச்சுவையாக பிரதமர் பேசினார்.
பிபா உலகக் கோப்பை இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
