நொய்டா : உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் – நொய்டா விரைவுச் சாலையில் நேற்று அதிகாலை இரண்டு பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் மூவர் பலியாகினர்; 20 பேர் படுகாயமடைந்தனர்.
மத்திய பிரதேசத்திலிருந்து புதுடில்லி நோக்கி சென்ற பஸ்சும், உ.பி.,யின் அனந்த் விகார் நோக்கி சென்ற மற்றொரு பஸ்சும், நொய்டா அருகே கிரேட்டர் நொய்டா விரைவுச் சாலையில் பலமாக மோதின. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணியர் பலருக்கு படுகாயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த கிரேட்டர் நொய்டா போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement