உதயநிதி வாரிசா? துணிவா?… கவிப்பேரரசு வைரமுத்து சொன்ன நச் பதில்

திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த அன்பழகனின் நூற்றாண்டு விழாவை அக்கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். அந்தவகையில் சென்னையில் இருக்கும் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா சிறப்பு கவியரங்கம் நடந்தது.  இனமானம் காத்த தமிழ் வானம் எனும் தலைப்பில் இந்தக் கவியரங்கத்திற்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார்.

கவியரங்கத்தில் பாடலாசிரியர்களான விவேகா, கபிலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

அப்போது கவிதைகளால் அன்பழகனுக்கு வைரமுத்து புகழாரம் சூட்டினார். அதேபோல் உதயநிதி குறித்து பேசிய வைரமுத்து, அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி வாரிசா இல்லை துணிவா என எல்லோருக்கும் கேள்வி இருக்கிறது. அவர் துணிவு மிக்க வாரிசு என்றார். 

அவரது இந்தப் பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக, அஜித் நடித்திருக்கும் துணிவு படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தை சென்னை, செங்கல்பட்டு, கோவை, வட ஆற்காடு, தென் ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் வெளியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.