சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைகளை காலி செய்யச் சொல்லி அரசியல் கட்சி பிரமுகர் மிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
பேரூராட்சி பகுதிகளில் 15 ஆண்டுகளாக பழம், காய்கறி, பூக்கடைகளை நடத்தி வருவோரை போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி உடனடியாக காலி செய்ய வேண்டுமென திமுக நகர செயலாளர் வி.பி.ராஜா கூறுவது வீடியோவில் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து, தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாருக்கு உள்ளான ராஜாவின் மனைவி கவிதா தம்மம்பட்டி பேரூராட்சி தலைவியாக உள்ளார்.