கூடலூர்: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட செம்பாலா திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நேற்று அதிகாலை நுழைந்த இரண்டு காட்டு யானைகள் வீடுகளை ஒட்டியிருந்த செடி, கொடிகளை சேதப்படுத்தியும், வாழை மரங்களை சேதப்படுத்தியும் சென்றது. இங்கு வசிக்கும் பிரகாஷ், சிவா உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்டோரின் வீடுகளை ஒட்டி நடமாடிய இந்த யானைகளின் நடமாட்டத்தால் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இத்தனை ஆண்டுகளில் தங்கள் பகுதிக்கு காட்டு யானைகள் வந்ததில்லை என்றும், இதுவே முதல் முறை என்றும் தெரிவித்தனர். இதுகுறித்த வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை அப்பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.