கூடுதலாக சொத்து இருப்பதை நிருபித்தால் முழு சொத்தையும் அரசுக்கு வழங்குவேன் – அண்ணாமலை

வருமானத்திற்கு அதிகமாக தான் சொத்து சேர்த்திருப்பதாக திமுகவினர் நிருபித்தால் முழு சொத்தையும் அரசுக்கு வழங்கி விடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில்,  ஐபிஎஸ் ஆனது முதல் தனது 10 வருட வருமானம், ஆடு, மாடு உள்ளிட்ட சொத்து விபரங்களை தமிழகத்தில் தனது நடைபயணம் துவங்கும் நாளில் வெளியிட உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும், ரஃபேல் கடிகாரம் தான் பாஜக தலைவராவதற்கு முன்பாக வாங்கியதாகவும் அதற்கான பில் உள்பட அனைத்து விபரங்களும் வருமான வரித்துறையிடம் சமர்பித்துள்ளதாகவும் திமுகவின் விமர்சனத்திற்கும் அண்ணாமலை பதிலளித்து உள்ளார்.

திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.

நான் @BJP4TamilNadu தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள்,… (1/5)

— K.Annamalai (@annamalai_k) December 18, 2022

“>

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.