சென்னை: சென்னை மாநகராட்சி பெயர் பலகையில் போஸ்டர் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பெயர் பலகைகளில் போஸ்டர் ஒட்டும் நபர்கள் மீது காவல்துறையில் புகாரளிக்கப்படும். கடந்த மாதத்தில் மட்டும் போஸ்டர் ஒட்டியதாக ரூ.1.37 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
