வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஷில்லாங்: திரிபுரா, மேகாலயா மாநிலங்களுக்கு சுமார் ரூ.6,800 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று(டிச.,18) துவக்கி வைத்தார்.
வரும் 2023ம் ஆண்டில் கர்நாடகா, தெலுங்கானா, உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களும் அடங்கி உள்ளது.

இந்நிலையில் மேற்கண்ட இரு மாநிலங்களில் வீட்டுவசதி, சாலை வசதி,விவசாயத்துறை, தொலைதொடர்புத்துறை, தகவல் தொழில் நுட்பத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் ரூ.6,800 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சிலின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வடகிழக்கு மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement