பட்டப்பகலில் கடைகளில் திருடும் கனேடிய மக்கள்: அதிரவைக்கும் ஆய்வறிக்கை


கனடாவில் வாடிக்கையாளர்கள் என்ற போர்வையில், கடைகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை அபாயகரமாக அதிகரித்துள்லது என ஆய்வறிக்கை ஒன்றில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடைகளில் திருட்டு சம்பவம்

பணவீக்கம் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்டவையே கடைகளில் திருட்டு சம்பவம் அதிகரிப்புக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.

கனடாவில் அக்டோபர் மாதத்தில் மளிகைப் பொருட்களின் விலை ஆண்டுக்கு ஆண்டு 11 சதவீதம் உயர்ந்துள்ளது.
இது சமீப நாட்களில் சரிவடையும் என்ற எதிர்பார்ப்பும் இல்லை என்றே கூறப்படுகிறது.

பட்டப்பகலில் கடைகளில் திருடும் கனேடிய மக்கள்: அதிரவைக்கும் ஆய்வறிக்கை | Shoplifting Mounting Across Canada

மட்டுமின்றி, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கான மளிகைப் பொருட்களின் மொத்தச் செலவு இந்த ஆண்டு இருந்ததை விட $1,065 அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் தீவிரமடையக்கூடும்

உணவுப் பொருட்கள் விலை உயர்வே மக்களை கடைகளில் திருடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வாளர் ஒருவர் குறிப்பிடுகிறார்.
மேலும், சில பொருளாதார வல்லுனர்கள் கூறுவது போல் அடுத்த ஆண்டு பொருளாதாரம் மந்தமானால் தொடர்புடைய பிரச்சனை இன்னும் தீவிரமடையக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பட்டப்பகலில் கடைகளில் திருடும் கனேடிய மக்கள்: அதிரவைக்கும் ஆய்வறிக்கை | Shoplifting Mounting Across Canada

அமெரிக்க டொலருக்கு நிகராக கனேடிய டொலரின் மதிப்பு கடந்த ஆகஸ்டு முதல் 7% வரையில் சரிவடைந்துள்ளது.
மட்டுமின்றி, ஜூன் மாதத்தில் 8.1% என இருந்த பணவீக்கம் அக்டோபரில் 6.9% ஆக குறைந்துள்ளது, ஆனால் முன்பு எதிர்பார்த்ததை விட தொடர்ந்து நிலையாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.