பழனி: பழனி முருகன் கோயிலில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை 10,84,242 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஐயப்ப பக்தர்கள் வருகையையொட்டி கார்த்திகை மாதத்தில் பழனியில் 10.84 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பழனி மலை ரோப் காரை 1,07,678 பெரும் மிநிலுவை ரயிலை 1,72,956 பேரும் பயன்படுத்தி உள்ளனர். பழனி மலைக்கோயிலில் நடைபெறும் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தில் 1,48,549 பக்தர்கள் உணவு அருந்தியுள்ளனர் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
